வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!

104

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என ஆண்டுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 – 18க்கான வருமான வரி கணக்கு தாக்கல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வருமான வரியை இன்று தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்கல் செய்யப்படும், அனைத்து கணக்குகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.