7 அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல் !

272

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 7 அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஐந்தரை கோடி ரூபாய் பணம், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா குறித்த 89 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் தங்க நகைகள் சிக்கியுள்ளன. இந்த ஆவணங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் உள்ளிட்ட 7 அமைச்சர்களின் பெயர்கள் ஆவணங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்துறை அமைச்சர் வேலுமணி, நிதியமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாநிலங்களைவை உறுப்பினர் வைத்தியலி்ங்கம் ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், 85 சதவீதம் வாக்காளர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.