குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான் கான்

126

குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டரில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என்று பதிவிட்டுள்ள இம்ரான்கான், சிறையிலிருந்து விடுவிக்கவும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம் என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.