இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு

899

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இம்மாதம் நடைபெற உள்ள ஐநா.பொதுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், பாகிஸ்தான் சார்பில் மஹ்மூத் குரேஷியும் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்குமாறு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் அனைத்து பிரச்சனைகள் குறித்து பேச பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.