பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இம்ரான் ஆலோசனை..!

952

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் முதல் முறையாக அந்நாட்டு ராணுவ தலைமையகத்திற்கு சென்று நாட்டின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு முதல்முறையாக சென்றார். ராணுவ தலைமையகத்தில், தளபதி பஜ்வா பிரதமர் இம்ரான்கானை வரவேற்றார். அவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, நிதியமைச்சர் ஆசாத் உமர் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு
ராணுவ உயர் அதிகாரிகளுடன், நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.