காவல்நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு..!

197

சென்னையில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு அடுத்த கோலடி பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தன்னுடைய வீட்டின் அருகில் வசித்துவரும் அமிர்தவல்லி என்பவருக்கும் இடையே கேட் வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அமிர்தவல்லி திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து ரேணுகாவை காவல்துறையினர் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேணுகா காவல்நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் ரேணுகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.