தமிழகத்தில் தலைவர் இல்லாத நிலை நீடிப்பதாக, நூல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

262

தமிழகத்தில் தலைவர் இல்லாத நிலை நீடிப்பதாக, நூல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் அப்துல் ரகுமான் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் முத்துலிங்கத்திற்கு கவிக்கோ விருது வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர், பேசிய அவர், கவியும், இசையும் ஒன்றுதான் என்று கூறினார். அப்துல் ரகுமான் போன்று சிந்தனையை ஒத்த கவிஞர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்று கூறிய இளையராஜா, சினிமா பாடல்களை தரம் குறைத்து யாரும் மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் தலைவர் இல்லாத நிலை நீடிப்பதாகவும், இதேபோன்று இந்த விழாவும் தலைமை இல்லாமல் நடப்பதாக அவர் கூறினார்.