ஐ.ஐ.டி. மாணவர்களிடையே பிறந்தநாள் கொண்டாடிய இசைஞானி

108

குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ளதாக குறிப்பிட்ட இளையராஜா, கனவு காண்பதைவிட முயற்சி செய்யுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றார். இளையராஜாவின் பாடல்களை ஐஐடி மாணவர்கள் அவர் முன்பு பாடி அசத்தினர். பின்னர் பேசிய இளையராஜா, இசையமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியதும், பாடல்கள் எழுதியதும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளதாக குறிப்பிட்டார். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள் என அறிவுரை வழங்கிய இளையராஜா, மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார்.