இளையராஜா, தோனி உள்ளிட்ட 84 பேருக்கு பத்ம விருதுகள் | குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்..!

557

இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 84 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.