கருணாநிதி மறைந்த நாள் தமிழர்களுக்கான துக்க தினம் – இசையமைப்பாளர் இளையராஜா

359

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நாள் தமிழர்களுக்கான துக்க தினம் என்று இசையமைப்பாளர் இளைஞராஜா தெரிவித்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், கருணாநிதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்துள்ளார். அவர் உயிரிழந்த நாள் தமிழர்களுக்கான கருப்பு தினம் என்று குறிப்பிட்டுள்ள இளையராஜா, இந்தத் துக்கத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். தூய தமிழ் வசனங்களை திரைப்படங்களில் அள்ளி வழங்கிய கலைஞர் கருணாநிதி, அரசியல், கலை, இலக்கியம், தமிழ் உள்ளிட்ட பல துறையில் சிறந்து விளங்கியவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.