காதலை தெரிவிக்க விமானத்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் !

314

தன் காதலை வெளிப்படுத்துவதற்காக இளைஞர் ஒருவர் விமானத்தில் இருந்து கீழே குதித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
உலகில் காதலை வெளிப்படுத்த பல்வேறு விதமான முயற்சிகளை காதலர்கள் செய்து வருகின்றனர். அந்த முயற்சியின் மூலம் தன் காதல் என்றும் இருவரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்பது பலரின் விருப்பம். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த டை மெயர்ஸ் என்ற இளைஞர், தனது காதலியை கவரும் வகையில் சாகசம் செய்து காதலை தெரிவிக்க விரும்பினார். அதற்காக பல்லாயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்துள்ளார். அதன் வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இதனை காணும் பலரும் காதலுக்கு கண்ணில்லை போன்ற கருத்துகளுடன் தங்கள் பாராட்டுகளை பதிவு செய்துள்ளனர்.