இலங்கை போர் குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

149

இலங்கை போர் குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கிய குறும்படத்தின் முன்னோட்ட காட்சி சென்னையில் வெளியிடப்பட்டது. விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கை போர் குற்றம் தொடர்பாக ஐ.நா. சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும், நிச்சயம் தனி ஈழம் உருவாகும் என்றும் கூறினார்.