ஜம்மு, திருப்பதி உட்பட ஆறு இடங்களில் புதிதாக ஐஐடி கல்வி நிறுவனங்களை துவங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஓப்புதல் வழங்கி உள்ளார்.

185

ஜம்மு, திருப்பதி உட்பட ஆறு இடங்களில் புதிதாக ஐஐடி கல்வி நிறுவனங்களை துவங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஓப்புதல் வழங்கி உள்ளார்.
கோவா, பாலக்காடு, தார்வார், பிலாய், ஜம்மு, திருப்பதி ஆகிய 6 இடங்களில் புதிதாக ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களை துவங்குவதற்கான, சட்டத் திருத்த மசோதா, கடந்த மாதம் மக்களவையிலும், கடந்த 2ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதையடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், கல்வி சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் ஆந்திராவில் என்.ஐ.டி., துவக்குவதற்கான, என்.ஐ.டி., சட்டத் திருத்த மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.