சிலைக் கடத்தல் வழக்குகள் விவகாரம் : ஐஜி. பொன். மாணிக்கவேல் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

151

சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் ஐஜி. பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் நீதிபதி உத்தரவு குறித்து விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐஜி. பொன்.மாணிக்கவேல் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என கூறிய நீதிபதி, புதிய மற்றும் பழைய வழக்குகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். செப்டம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை பொறுத்து அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.