ஈரான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிபர் ருஹானி மற்றும் இப்ராஹிம் ரெயிசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

306

ஈரான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிபர் ருஹானி மற்றும் இப்ராஹிம் ரெயிசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஈரான் நாட்டில், அதிபர் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரச்சாரங்கள் நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றது. தங்கள் நாட்டின் 8வது அதிபரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சுமார் 63 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஈரானில் நடைபெறும் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.