இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

198

இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர், இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட, கட்சி மேலிடத்தில் அனுமதி வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.