ஏ.டி.எம்.மில் பல லட்சம் கொள்ளை | முறைகேடாக பணம் எடுத்த பெண் தலைமறைவு

277

புதுச்சேரி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இளம்பெண்னை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் மறைமலையடிகள் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் முறைகேடாக பணம் எடுப்பது கணினி மூலம் மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஏ.டி.எம். இயந்திரம், சி.சி.டி.வி. காட்சிப் பதிவு ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்தனர்.

இதில் இளம் பெண் ஒருவர் முறைகேடாக, பல லட்சம் ரூபாய் எடுத்தது தெரியவந்தது. தலைமறைவாகியுள்ள அந்த பெண்ணைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்த இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.