டி20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியல் 116 புள்ளிகளுடன் இந்திய அணி 5-வது இடம்!

382

ஐசிசி வெளியிட்ட டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி, டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 116 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் நீடித்து வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வதி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளும் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதனால் தரவரிசை பட்டியலில் இரு அணிகளும் முன்னேற்றம் அடையவில்லை என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.