ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு : அனைத்து வயது மக்களும் யோகாவை கடைப்பிடிக்கலாம் !

266

நடப்பாண்டு சர்வதேச யோகா தினத்தின் மைய கருத்தாக, யோகாவுக்காக என்பதை ஐநா அறிவித்துள்ளது.
ஐநா சபை, யோகாவுக்காக என்பதை சர்வதேச யோகா தினத்தின் மைய கருத்தாக அறிவித்துள்ளதை அடுத்து, மனதுக்கும், உடலுக்கும் இடையே சமநிலையை அடைவதில் யோகாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உலக சுகாதார நிறுவனமும் சமுதாயத்தில் நல்ல ஆரோக்கியத்தை உருவாக்க, யோகாவை ஆதரித்து வருகிறது. உடல் தகுதியுடன் இருக்கவும், வாழ்க்கை முறையில் அடிப்படையான நோய்களை எதிர்க்கவும் யோகாவை அனைத்து வயது மக்களும் கடைப்பிடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.