நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

185

நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி நாடு முழுவதும் 31 இடங்களில் , 27 தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே நெடுவாசலில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.