ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசலில் 17-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

150

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசலில் 17-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என நெடுவாசல் பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் கோட்டைக்காடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கோட்டைக்காடு பகுதி மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். நெடுவாசல் பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.