ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – புதுச்சேரி மாநில முதலமைச்சர்

145

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் சட்டசபையில் முன்மொழிந்தார்

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும், இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் முன்மொழிவு ஒன்றை கொண்டு வந்தார். அதில் இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.