ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் | 22 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள்

360

மத்திய மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 22 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களின் உறுதி மொழிகளை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அளித்த உறுதிமொழிக்கு போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நூறு மடங்கு தீவிரமாக நடைபெறும் என்று போராட்டக்குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் ஒத்திவைக்கபடுவதாகவும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.