ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

739

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் இரட்டை நகரங்களான ஐதராபாத்-செகந்திராபாத் இடையிலான, மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கியது. தனியார் நிறுவனத்துடன் மாநில அரசு இணைந்து, 15 ஆயிரம் ரூபாய் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக மியாப்பூர்-நாகோல் இடையே, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கான மெட்ரோ பணிகள் முடிவடைந்துள்ளன. இதன் தொடக்க விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரெயிலில் அவர் பயணித்தார்.
இந்த ரெயில் சேவை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். இந்த ரெயிலில் சுமார் 330 பேர் பயணிக்க முடியும். பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இரவு 11 மணி வரை ரெயில் சேவை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ice_screenshot_20171128-150812