ஹைதராபாத்தில் விஷம் வைத்து கொல்லப்படும் நாய்கள் வலுக்கும் கண்டனம்!

1061

டிரம்பின் மகள் இவாங்கா இந்தியா வருவதை முன்னிட்டு ஹைதராபாத்தின் சில பகுதிகளில் தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்கிறார். இவாங்காவின் வருகையை ஒட்டி, ஹைதராபாத் நகர தெருக்களில் வசிக்கும் மக்கள் மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். மேலும் பஞ்சாரா , ஜூப்ளி ஹில்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு விலங்கின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.