ஐதராபத்தில் 2007ல் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் : இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது

333

ஐதராபாத்தில் 44 பேரை பலி கொண்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்பட்ட பிரபல கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் கோகுல் சாட்டில் 32 பேர், திரையரங்க பகுதியில் 12 பேர் என 44 பேர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த 2-வது கூடுதல் மெட்ரோபாலிடன் செசன்ஸ் நீதிபதி ஸ்ரீனிவாஸ் ராவ், தீர்ப்பை செப்டம்பர் 4ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, 44 பேரை பலி கொண்ட இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், இன்று தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.