ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிஸ்புல் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து தேசிய புலனாய்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

196

ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிஸ்புல் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து தேசிய புலனாய்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2013ஆம் ஆண்டு, ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தின் தில்சுக்நகரில் சக்தி வாய்ந்த இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 18 பேர் பலியாகினர். 130 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலானாய்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இந்திய முஜாகிதீன் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான யாஷின் பத்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷியா, உர் ரஹ்மான் உட்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.