விமான நிலைய பயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனை | 600 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

92

ஐதராபாத் விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் 600 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது.

ஐதராபாத் ஆர்.ஜி.ஐ விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வந்த ஒரு பயணியிடம் சோதனையிட்டதில் மூடியிருந்த மிக்சியில் 4 கடத்தல் தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. டிரில்லிங் மெஷின் மூலம் சீலிடப்பட்ட மிக்சியில் 2 தங்கக் கட்டிகள் தலா 250 கிராமும் மற்ற இரு தங்கக் கட்டிகள் தலா 50 கிராம் என 600 கிராம் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் கடத்தல் நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் தங்கத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.