ஆந்திராவில் நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரனின் கையில் அவரது சகோதரி ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

448

ஆந்திராவில் நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரனின் கையில் அவரது சகோதரி ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த ஞாயிற்று கிழமை தன்னுடைய நண்பர்களுடன் பேத்தபல்லி ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை காண குடும்பத்தினர் சென்றனர். அப்போது வினோத்தின் உடலை கண்ட அவரது சகோதரி சிரிஷா, ரக்‌ஷா பந்தனுக்காக தான் வாங்கி வைத்திருந்த ராக்கியை வினோத்தின் கைகளில் கட்டினார். வருடா வருடம் தனது சகோதரருக்கு ராக்கி கட்டி பாசத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்த அவர், இந்த ஆண்டு அவர் உயிரோடு இல்லாதது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.