ஐதராபாத்தில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழ‌ந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

164

ஐதராபாத்தில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழ‌ந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
செகந்திராபாத்தில் சில்கல்குடா பகுதியில் பழைய கட்டடம் ஒன்று நேற்றிரவு இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டட இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியிருந்த இருவரின் உடலை அவர்கள்
மீட்டனர். இடுபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.