பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி : நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி ..!

266

பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை 5க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் ஹன்டர்ஸ் வெற்றி பெற்றது.
இந்தியாவின் 3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஐதராபாத் ஹன்டர்சும், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சும் மோதின. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு, ஆண்கள், பெண்கள் இரட்டையர் பிரிவுகள், கலப்பு இரட்டையர்கள் பிரிவுகளில் ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதன்மூலம் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை 5க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் ஹன்டர்ஸ் வெற்றி பெற்றது.