ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பிரிவில் அதிவேக வீரர் உசேன் போல்ட் மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

283

ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பிரிவில் அதிவேக வீரர் உசேன் போல்ட் மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பிரிவில் ஜமைக்காவின் உசேன் போல்ட் பங்கேற்றார். போட்டியின் பந்தய தூரத்தை 9 புள்ளி 81 வினாடிகளில் அவர் கடந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்போட்டிகளில் 100 மீட்டர் பிரிவில் மூன்றாவது முறையாக தங்கம் வென்ற உசேன் போல்ட் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் அவர் இதுவரை 7 தங்கப் பதக்கங்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.