மனைவியை அடித்துக் கொன்ற காவலர் கைது..!

168

சென்னையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொத்தவால்சாவடி போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றும் பிரேம்நாத், பெரம்பூர் காவலர் குடியிருப்பில், மனைவி அர்ச்சனா மற்றும் இரண்டு குழந்தைகளோடு வசித்து வந்தார். திருமணமாகி பதினேழு ஆண்டுகள் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் பிரேம்நாத் இரும்புக் கம்பியால் அடித்ததில் பலத்த காயமடைந்த அர்ச்சனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செம்பியம் போலீசார், காவலர் பிரேம்நாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.