பசிக் கொடுமையில் இருந்த கரடியை சீண்டிய வாலிபர் இழுத்து சென்று வேட்டையாடிய காட்சி

972

தாய்லாந்து நாட்டில், உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை, கரடி கொடூரமாக வேட்டையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெத்சபுன் மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலில் கரடி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலிற்கு சென்ற வாலிபர்கள் சிலர் கரடிக்கு கயிற்றின் மூலம் உணவு கொடுத்து வந்தனர். அதில் ஒருவர் உணவை கொடுக்காமல் சற்று விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கரடி மதில் சுவரில் இருந்து அந்த வாலிபரை இழுத்து வேட்டையாடியது. பல்வேறு போராட்டடிற்கு பிறகு வாலிபரை மீட்ட நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.