ஹங்கேரியாவில் நடைபெறும் கிரண்ட் பிரிக்ஸ் கார்பந்தய போட்டியில் வெற்றி பெற நடப்பு சாம்பியனான லூவிஸ் ஹேமில்டன் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

176

ஹங்கேரியாவில் நடைபெறும் கிரண்ட் பிரிக்ஸ் கார்பந்தய போட்டியில் வெற்றி பெற நடப்பு சாம்பியனான லூவிஸ் ஹேமில்டன் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
21 சுற்றுகளை கொண்டது பார்முலா ஒன் கார்பந்தயமாகும். இதன் 6 வது சுற்றான ஹங்கேரியன் கிரண்ட் பிரிக்ஸ் போட்டி வரும் ஞாயிற்று கிழமை புத்தாபெஸ்ட் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே 4 முறை வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்தின் லூவிஸ் ஹேமில்டன் 5 வது முறையாக மீண்டும் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டி வருகிறார். 31 வயதான ஹேமில்டன் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியில், சக அணி வீரரான நிகோ ரோஸ்பெர்க்கை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.