ஓசூரில் கோயில் நகைகளை கொள்ளையடிக்க முயன்றவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

173

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழமைவாய்ந்த் சந்திரசூடேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் பின்பக்க கதவு வழியாக வந்துள்ள கொள்ளையர்கள், அம்மன் வீற்றிருக்கும் அறையின் முன்பக்க கதவினை கடப்பாரையால் உடைத்துள்ளதாக தெரிகிறது. உடனே சத்தம் கேட்ட கோயில் காவலாளி மற்றும் அவரின் உதவியாளர், கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அதில் ஒரு கொள்ளையன் மட்டும் பிடிபட, மற்றவர்கள் தப்பியோடி உள்ளனர்.

பின்னர் கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிப்பட்ட கொள்ளையனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, கொள்ளையர்கள் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், சாமி தரிசனம் செய்வது போல கோயிலுக்கு நுழைந்து, நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே, மற்றொரு கொள்ளையனையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.