ஓசூரில் கடும் பனிப் பொழிவு

221

ஓசூரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் டிசம்பர் வரை பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். அதன்படி நவம்பர் 2-வது வாரத்தில் இருந்தே கடும் பனிப்பொழிவு தொடங்கியது. தற்போது பனிப்பொழிவின் தாக்கம் அதிகாரித்துள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. குளிருக்கு அஞ்சி பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.