ஓசூர் அருகே, மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

256

ஓசூர் அருகே, மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தளி அருகே உள்ள ஜே.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சுனில் ரெட்டி. இவரது மனைவி வித்யா மற்றும் தாயார் ஜானகியம்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த வித்யா, மாமியார் ஜானகியம்மாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக வித்யாவை கைது செய்து, தளி பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட வித்யாவிற்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.