ஓசூரில் பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, கடைகளிலிருந்து 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

212

ஓசூரில் பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, கடைகளிலிருந்து 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில், ஓசூர் நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்களில், 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பார்சலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர்களை பறிமுதல் செய்ய, மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஓசூர் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பேருந்து நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 13 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.