மருத்துவமனைகளில் சாய்வுதள பாதை, தீ தடுப்பு வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

260

சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவமனை தொடர்பாக பொதுநல மனு ஒன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுக்குமாடி மருத்துமனைகளில் சாய்தள பாதை, தீயணைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து புதிய திருத்த விதிகள் கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு இதுகுறித்து பரிந்துரை செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளின் விவரங்கள், அங்கு சாய்வுதள பாதை, தீத்தடுப்பு வசதிகள், கட்டிட பூர்த்தி சான்று, தீயணைப்பு துறை அதிகாரிகளின் ஆய்வு செய்த விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் 3 மாதத்துக்குள் விரிவான ஒரு அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.