மத்திய அரசு அளித்துள்ள 600 கோடி ரூபாய் முதல்கட்ட நிதியுதவிதான் – மத்திய உள்துறை அமைச்சகம்

552

கேரளத்துக்கு வெள்ள நிவாரணமாக மத்திய அரசு அளித்துள்ள 600 கோடி ரூபாய் முதல்கட்ட நிதியுதவிதான் என்றும், மேலும் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்த பிறகு அறிவித்த 500 கோடி நிவாரணமும், அதற்கு முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த 100 கோடியும் கேரள அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நிவாரண உதவிதான் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், அடுத்தகட்டமாக மத்திய குழு, கேரளத்துக்குச் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும், மத்தியக்குழுவின் அறிக்கையை அடுத்து, கேரளத்துக்கு மீண்டும் தேவைப்படும் அளவுக்கு நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.