புனித ஹஜ் பயணத்திற்காக, 450 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, முதல் விமானம் சவுதிக்கு புறப்பட்டு சென்றது.

300

புனித ஹஜ் பயணத்திற்காக, 450 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, முதல் விமானம் சவுதிக்கு புறப்பட்டு சென்றது.
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் செல்வதற்காக, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,468 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் காலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 221 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 11 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.