சங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

300

வட மாநிலங்களில் சங்கராந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் புண்ணிய நதிகளில் நீராடி வருகின்றனர். கங்கை நதி பாயும் இடங்களில் வசிப்பவர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டு வருகின்றனர். ஹரித்துவார், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் கங்கையில் புனித நீராடினர். பின்னர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அவர்கள் கலந்து கொண்டனர்.