போலந்தில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

252

போலந்தில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலாந்தில் உள்ள பைட்கோஸ்கசில் நடைபெற்ற , இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்ட அவர், 86.48 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த நிலையில் டெல்லி திரும்பிய நீராஜ் சோப்ராவுக்கு விமானநிலையத்தில் மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் பட்டாளம் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீராஜ் சோப்ரா பங்கேற்பது குறித்து, இந்திய தடகள போட்டி சங்கம், உலக நிர்வாகக் குழு சர்வதேச சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.