இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நீக்கம்..!

39

இந்திய ஹாக்கி அணியில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த மே மாதம் ஹரேந்திர சிங் பொறுப்பு ஏற்றார். ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஆசிய விளையாட்டில் களம் இறங்கிய இந்திய அணி இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றது.

ஒடிசாவில் நடைபெற்ற உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி கால்இறுதியுடன் வெளியேறியது. இந்நிலையில், இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.