ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

120

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் டி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் தொடக்கத்திலிருந்தே , இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் 4 க்கு 0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்துள்ளது.