ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைதேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பிரேம்குமார் துமல் அறிவிப்பு !

291

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக பிரேம்குமார் துமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
68 உறுப்பினர்களை கொண்ட ஹிமாச்சல் சட்டப்பேரவைக்கு நவம்பர் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்து விட்டு, பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன. இந்தநிலையில், ஹிமாச்சல் தேர்தல் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக பிரேம்குமார் துமல் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், ஏற்கனவே 2 முறை ஹிமாச்சல பிரதேச முதலமைச்சராக பொறுப்பு வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Shimla: BJP winning councilors of Municipal Corporation Election with former chief minister Prem Kumar Dhumal  in Shimla on Saturday.PTI  Photo(PTI6_17_2017_000175B)
Shimla: BJP winning councilors of Municipal Corporation Election with former chief minister Prem Kumar Dhumal in Shimla on Saturday.PTI Photo(PTI6_17_2017_000175B)