வரலாற்றில் இல்லாத வேதனையை அமெரிக்க சந்திக்கும் -வட கொரியா பகிரங்க எச்சரிக்கை!

463

தங்கள் நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையால், அமெரிக்கா வரலாற்றில் இல்லாத வேதனையை சந்திக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடும் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அணு ஆயுத பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா-வில் வட கொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கான தீமானத்தை கொண்டு வந்தது. அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சீனா மற்றும் ரஷ்யா வலியுறுத்தின. இதனையடுத்து ஐ.நா-வில் மாற்றங்களுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வட கொரியா, அமெரிக்கா வரலாற்றில் இல்லாத வேதனையை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது