பாம் புயலால் வரலாறு காணாத பனிப்பொழிவு | அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் வீடுகளில் முடக்கம்

108

பாம் புயல் காரணமாக அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் மையம் கொண்ட பாம் பனிப்புயல் கொலராடோ மாகாணம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுடன் சூறைகாற்றும் வீசி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி உறைந்துள்ளது. இதனால் விமானப் போக்குவரத்தும் முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரிதும் தவிப்புக்குள்ளாயினர். வரலாறு காணாத பனிப்புயலால் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பனிக்காற்று கடுமையாக வீசி வருவதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கயுள்ளனர்.