அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு திடீரென செல்வாக்கு சரிந்துள்ளது

247

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு திடீரென செல்வாக்கு சரிந்துள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 8 ஆம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். ஹிலாரி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட இ–மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 33 ஆயிரம் இ-மெயில்களை அவர் நீக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த எப்.பி.ஐ. விசாரணையில் ஆதாரம் இல்லாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பிரச்சாரத்தின் போது இதுபற்றி டிரம்ப் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில், எப்.பி.ஐ. இது தொடர்பாக வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது. தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த நடவடிக்கையால் ஹிலாரியின் செல்வாக்கு சரிந்துள்ளது.